Pages

Dec 4, 2014

சருமத்தில் தேவையற்ற முடி வளர்ச்சியை தடுக்கும் பவுடர்


பெண்களுக்கு முகம் மற்றும் இதர பாகங்களில் அதிக அளவு முடி வளர்வதற்குக் காரணமே, ஹார்மோன் மாற்றங்களும் பழக்க வழக்கங்களும் தான். த்ரெடிங், வாக்ஸிங் போன்றவற்றைச் செய்யும் போது முடி வளராமல் தடுக்கவும் சில சிகிச்சைகள் இருக்கின்றன. 

சுட்ட வசம்புத்தூள், குப்பைமேனி கீரை பவுடர், கோரைக்கிழங்கு பவுடர், கஸ்தூரி மஞ்சள் பவுடர். இந்த நான்கையும் சம அளவு கலந்து வைத்துக் கொள்ளுங்கள். உடம்பில் இருக்கும் தேவையற்ற முடிகளை அகற்றி, அழகைக் கொடுக்கும் அசத்தல் மிக்ஸ் இது! மஞ்சள் பூசிக் குளிப்பது போல் இந்த பவுடரை முகம் முதல் பாதம் வரை நன்றாக தேய்த்து குளியுங்கள். 

புருவத்தில் இந்த பவுடர் படுவதால் முடி உதிர்ந்துவிடுமோ என்று பயப்பட வேண்டாம். வாரம் இருமுறை குளித்து வந்தாலே முகம், உடம்பில் இருக்கும் தேவையற்ற முடிகள் நிறம் மாறி, பின் உதிர்ந்துவிடும். மிருதுவான ப்யூமிக்ஸ்டோனை (நாட்டு மருந்துக் கடையில் கிடைக்கும்) வாங்குங்கள். 

கலந்து வைத்திருக்கும் மிக்ஸை குழைத்து ப்யூமிக்ஸ்டோனில் தடவி, முடி இருக்கிற பகுதிகளில் லேசாகத் தேயுங்கள். இதை தினமும் செய்து வந்தாலும் முடி உதிரும். மேற்கொண்டு முடி வளராது. 

த்ரெடிங், வாக்ஸிங் என்று அடிக்கடி பியூட்டி பார்லர் பக்கம் போகிறவர்கள் தினமும் முகம், கை, கால்களை கழுவும்போதெல்லாம் சோப்புக்கு பதிலாக இந்த மிக்ஸை பயன்படுத்தலாம். இதனால் முடியை அகற்றியதால் ஏற்பட்ட கருமையும் புள்ளிகளும் மறைவதுடன் சருமமும் மருதுவாகும்.

This article source from malaimalar.

Sep 10, 2014

ஆனந்தமான வாழ்க்கைக்கு - வேதாத்திரி மகரிஷி

வாழ்க்கை வரம் நமக்கு... வாழத் தெரிந்தால்! அப்படி வாழத் தெரிந்தவர்கள் இங்கே சில பேர்.
தெரியாதவர்கள்தான் பல பேர். அந்தச் சிலரைப் பலராக்கும் அக்கறைதான் இந்த இணைப்பின் நோக்கம்! 

நம் வாழ்க்கையில் ஆனந்தம் அட்சயப் பாத்திரமாக இருக்க வேண்டும்என்பதுதானே நம் அனைவரது விருப்பமும்?! அதற்கு எந்தப் புரட்டிப் போடும்புரட்சியும் தேவையில்லை. நம்முள் கொஞ்சம் மாற்றம் போதும்.

''
என்னை நானே கொண்டாடிக் கொள்கிறேன்'' என்பார் ஓஷோ ரஜினீஷ்! அப்படி உங்களை நீங்களும் கொண்டாடுவதற்கு உங்கள் மனதை இன்னும் அழகாக்கும்சூட்சமம் சொல்லத்தான்... இந்த 'ஆனந்தமான வாழ்க்கைக்கு!!! 

1. சந்தோஷம் என்பது வாங்கும் பொருட்களில் இல்லை. சந்தோஷத்தின்இருப்பிடம் மனம்தான். மனதின் கன்ட்ரோல் நம்மிடம் தான். எனவே, ஆனந்தமாகஇருக்க வேண்டுமா, வேண்டாமா என்பதை முடிவு செய்ய வேண்டியது நீங்கள் மட்டுமே.

2.
வாழ்க்கையை ரொம்ப இறுக்கமாகக் கழிக்காதீர்கள். கொஞ்சம் லகுவாக,நகைச்சுவையாக அணுகுங்கள். அருகில் இருப்பவர்கள் நகைச்சுவை சொன்னால்சிரியுங்கள். தினமும் இரண்டு, மூன்று நபர்களையாவது சிரிக்க வையுங்கள். சிரிப்பு ஒரு தொற்று நோய். இடம் விட்டு இடம் பெயர்ந்து ஆரோக்கியமாகப் பரவும்.

3.
உடற்பயிற்சியும் ஆரோக்கியமான உணவும் உங்களுக்கு தன்னம்பிக்கைஊட்டும்; உடலின் சக்தி தேவையை நிறைவேற்றும். உற்சாகமாக உணர்வீர்கள்.உடற்பயிற்சியின்போது உடலில் சுரக்கும் 'எண்டோர்பின்'களால் (endorphins) மனது புத்துணர்வு பெறும் என்கிறது மருத்துவ உலகம்.

4.
வேலை, கடமை இத்யாதிகளுக்கு மத்தியில் புத்தகம் படிப்பது, நன்றாக ஒருகுளியல் போடுவது, இசை கேட்பது... இப்படி ஏதாவது உங்கள் மனதுக்குப் பிடித்தஒரு செயலுக்கு தினமும் சில நிமிடங்கள் ஒதுக்குங்கள். அதேபோல், தினமும்கொஞ்ச நேரம் உங்கள் மனதுக்கு மகிழ்ச்சி தரும் பசுமையான நினைவுகளைஅசைபோடுங்கள். 

5.
ஆனந்தம் என்பது 'லக்' அல்ல, நாம் எடுக்கும் முடிவுகளின் விளைவுதான்என்பதில் தெளிவாக இருங்கள். அன்னப் பறவையாக மாறி நல்லவற்றையும்,ஆனந்தம் தருபவற்றையும் அதிகம் கவனியுங்கள். உங்களைக் கடந்து போகும் சம்பவங்களில், சந்தோஷமான விஷயங்களை அதிகம் உள்வாங்குங்கள்.

6.
தாழ்வு மனப்பான்மையைத் தூக்கிக் கடலில் போடுங்கள். ஏதேனும் தவறு,தோல்வி நடந்தால் அதற்குரிய காரணத்தை ஆராய வேண்டுமே தவிர... நத்தைஓட்டுக்குள் முடங்கிவிடக் கூடாது. 

7.
உங்கள் மனதை நீங்கள்தான் உற்சாகப்படுத்த வேண்டும். குழந்தைகளுடன்செலவிடும் சந்தோஷ தருணங்கள், நல்ல காமெடி திரைப்படங்கள், நிகழ்ச்சிகள்ஆகியவை உங்களை ஆனந்தமாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்கும் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். 

8.
திருத்தமாக உடையணிந்து நேர்த்தியாக இருக்கப் பழகுங்கள். மனோரீதியாகஅது உங்களை தன்னம்பிக்கையாகவும், ஆரோக்கியமாகவும், ஆனந்தமாகவும் வைக்கும்.

9.
புது இடங்களைப் பார்ப்பது, புது மனிதர்களுடன் பழகுவதெல்லாம் உற்சாகமான வாழ்க்கையின் வழித்தடங்கள். எனவே, அவ்வப்போது 'அவுட்டிங்' செல்லுங்கள். பரிசுத்தமான இயற்கையின் இருப்பிடங்கள் இதற்கு பெட்டர் சாய்ஸ்! 

10.
ஆன்மிகவாதியாக இருங்கள். ஆனால், மதவாதியாக மாறிவிடாதீர்கள். உங்களுக்கு ஆனந்தமும் நிம்மதியும் தரும் நூல்களை வாசியுங்கள்.
11. கவலைகள் இல்லாத மனிதன் இல்லை. அவற்றையும் வாழ்க்கையின் ஒரு பாகமாகவே ஏற்றுக் கொள்ளுங்கள். காலம், கவலைகளை ஆற்றிவிடும். 

12.
விருப்பமிருந்தால் ஒரு செல்லப் பிராணியை வளருங்கள். அதனுடன் தினமும் நேரம் செலவிடுங்கள். எதிர்பார்ப்பில்லாத அன்பு, அதனிடம் நிறையவேகிடைக்கும்! 

13.
தினமும் காலையில் ஒரு ஆனந்தமான நாள் உங்களுக்காகக் காத்திருக்கிறதுஎன்று விழித்துக் கொள்ளுங்கள். இரவு படுக்கைக்குச் செல்லும் முன் அன்றையநாளின் சந்தோஷங்களை அசைபோடுங்கள். யாரையேனும் காயப் படுத்தியிருந்தால் அவர்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டுமென முடிவெடுங்கள்.'நல்ல அம்மா' நீங்கள்தான்! 

14.
குழந்தைகள் ஏதாவது தவறு செய்தால், அது தவறு என்பதை அவர்கள் உணரச்செய்யுங்கள். உணர்ந்த பின்னும் மீண்டும் மீண்டும் அறிவுரை சொல்லாதீர்கள். 

15.
உங்களுக்குப் பிடித்த எல்லாமே உங்கள் குழந்தைக்கும் பிடிக்க வேண்டும் என்பதில்லை. எனவே, குழந்தைகளின் ரசனைக்கும் மதிப்பு கொடுங்கள்.

16.
குழந்தைகள் உங்களை எரிச்சல் படுத்தும். மதிக்காதது போல் தோன்றும்.உங்களுக்குப் பிடிக்காததைச் செய்யும். பொறுமை ரொம்ப முக்கியம். அவர்கள் குழந்தைகள்தானே?! 

17. '
என்னால முடியல... நீயாச்சும் டாக்டராகு' என்று உங்கள் ஏக்கங்களைஅவர்களின் லட்சியங்களாக திணிக்காதீர்கள். குழந்தைகளின் விருப்பங்களைச்சார்ந்தே அவர்களின் எதிர்காலம் அமையட்டும்.

18. '
அம்மா, அப்பா இருக்கோம்' என்று எந்தச் சூழ்நிலையிலும் அவர்களுக்குப் பாதுகாப்பு உணர்வைக் கொடுங்கள். பயத்தை பழக விடாதீர்கள்.

19.
குழந்தைகளின் ரசனையை ஊக்கப்படுத்துங்கள். மியூஸிக், டான்ஸ்,விளையாட்டு என்று அவர்களுக்கு விருப்பமானவற்றில் அவர்களைச்சேர்த்துவிடுங்கள்.

20.
நீங்கள் ஏதாவது தவறு செய்தால் குழந்தையிடம் மன்னிப்புக் கேட்கலாம்.. தவறில்லை. தப்பு செய்தால் மன்னிப்புக் கேட்க வேண்டும் எனும் பழக்கத்தை அது குழந்தைகளிடம் ஆழமாகப் பதித்து விடும்.
21. குழந்தைகளுடன் குடும்பமாக அவ்வப்போது வெளியே சென்று வருவது,பெற்றோர் - குழந்தைகள் பிணைப்பை வலுவாக்கும். 

22. '
உன்னைப் பத்து மாசம் சுமந்தவ நான்' என்றெல்லாம் டயலாக் விடவேண்டாம். அதைக் குழந்தைகள் அதற்குரிய பருவம் வரும்போது தானாகபுரிந்துகொள்ளும்.

23.
குழந்தைகளின் சின்னச் சின்ன குறும்புகளுக்கு தண்டனை கொடுக்காதீர்கள். வாழ்க்கையே ஒரு பாடம்தான். ஒவ்வொரு பருவத்திலும் சில சேட்டைகள் இருக்கும். அதை அனுமதியுங்கள். 

24.
குழந்தைகளின் சின்னச் சின்ன வெற்றிகள், திறமைகளைப் பாராட்டுங்கள்.பாராட்டுகள் அவர்களுடைய வழியை அவர்களுக்கு உறுதிப்படுத்தும். நல்லசெயல்களைத் தொடர்ந்து செய்ய உற்சாகப்படுத்தும்.

25. '
முக வாட்டமா, மன அழுத்தமா, ஆனந்தமா...' என்று குழந்தைகளின்மனநிலையை எப்போதும் கவனித்துக் கொண்டே இருங்கள். ஒரு நல்ல அம்மாவின் அடையாளம் அது 

26.
குழந்தைகளுக்கு வீட்டில் உள்ள வேலைகளில் சின்னச் சின்ன பொறுப்புகளைக் கொடுங்கள். தப்பும் தவறுமாக அவர்கள் பழகட்டும். முடிவுகளை எடுக்க ஊக்கப்படுத்துங்கள். இவையெல்லாம் குழந்தைக்கு பொறுப்பையும்தன்னம்பிக்கையையும் தரும். 

27.
அம்மா ஆனவுடன் உடற்பயிற்சியையெல்லாம் மூட்டை கட்டி வைத்தாயிற்றா?தவறு. சிறு சிறு உடற்பயிற்சிகள் செய்யுங்கள். உடலை ஆரோக்கியமாகவைத்திருங்கள். உங்களைப் பார்த்து குழந்தைகளும் உடற்பயிற்சி செய்யஆர்வமாகும். 

28.
வீட்டு வேலை ஒவ்வொன்றாக முளைத்துக்கொண்டேதான் இருக்கும். எனவே,உடல் அசதியாக இருந்தால் தூங்கி ஓய்வெடுங்கள். குழந்தைகள் பள்ளியில் இருந்து வரும்போது முகத்தில் அசதியைக் காட்டாதீர்கள்

. 29.
குழந்தைகளுக்கு ஒரு நல்ல வழிகாட்டியாக இருங்கள். 'நான் அம்மா மாதிரிஇருக்கணும்' என்று குழந்தை நினைக்க வேண்டும். உங்கள் சொல் ஒன்று... செயல் ஒன்றாக இருப்பது எப்போதும் பயன் தராது. 

30.
குழந்தைக்கு ஒரு நல்ல தோழியாகவும் இருங்கள். ஸ்கூல் கதை, ஆட்டோகதையை எல்லாம் அவர்கள் ஆர்வமாகப் பேச வரும்போது, அதைத் தட்டிக் கழிக்காமல் கேளுங்கள்.
31. வேலை முக்கியம்தான். ஆனால், வாழ்க்கை என்பது வேலை மட்டும் இல்லை.எனவே, அதற்கான நேரத்தை மட்டும் அதற்காக ஒதுக்குங்கள். வாங்கும்சம்பளத்துக்கு குறைவில்லாமல் வேலை பாருங்கள், கூடுதலாக வேண்டாம்.அலுவலகத்துக்காக குடும்ப ஆனந்தங்களை தலை முழுகாதீர்கள்.

32.
உங்களுக்கு விருப்பமான வேலையையே தேர்வு செய்யுங்கள். கிரியேட்டிவ் துறையில் ஆர்வத்தை வைத்துக்கொண்டு கணக்கெழுதப்போகாதீர்கள். 

33.
உங்களால் செய்ய முடியாதவற்றை, ஜென்டிலாக மறுத்துவிடுங்கள்.மேலதிகாரியைத் திருப்திப்படுத்த அதிக வேலையைத் தூக்கித் தலையில்போட்டுக்கொள்வது மன அழுத்தத்தைத் தரும். 

34.
உடன் பணிபுரிபவர்களின் உதவிகள் தேவைப்படும்போது தயங்காமல் பெற்றுக்கொள்ளுங்கள். தானே செய்வேன் என அடம் பிடிக்காதீர்கள். அதேபோல,இக்கட்டான நேரங்களில் அவர்களின் வேலையையும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

35.
வேலையையும் அது சார்ந்த டென்ஷன்களையும் முழுவதாக மறக்கும் சிலநாட்கள் மிக அவசியம். எனவே, கிடைக்கும் ஓய்வு நாட்களில் குடும்பத்துடன்வெளியே எங்கேனும் சென்று வாருங்கள்.

36.
மேல் அதிகாரியிடம் வாக்குவாத சூழலை பெரும்பாலும் தவிர்த்துவிடுங்கள். பலர் முன்பாக, மேலதிகாரியின் அறியாமையை வெளிப்படுத்த நினைக்காதீர்கள்.

37.
இங்கு பலரின் கவலையும் 'இந்த வேலையை எப்படி முடிக்கப் போறோம்?'என்பதைவிட, அந்த வேலையைத் தொடங்குவதில்தான். நம்பிக்கையான தொடக்கம் நேர்த்தியான முடிவைத் தரும். எனவே, எந்த வேலையையும் நம்பிக்கையுடன் தொடங்குங்கள்.போடுங்கள் டைம்டேபிள்! 

38.
உங்கள் வாழ்க்கையின் சந்தோஷங்களை வரிசைப்படுத்துங்கள். பெரும்பாலும் அவை குழந்தைகள், வாழ்க்கைத் துணை, நல்ல வேலை, ஆன்மிகம், உடல்நலம் என நீளும். அதன் அடிப்படையில் உங்கள் நேரத்தையும் கவனத்தையும்செலவிடுங்கள்.

39.
எவற்றுக்கெல்லாம் தேவையில்லாமல் அதிக நேரம் செலவிடுகிறீர்கள்என்பதைப் பட்டியலிடுங்கள். அவற்றை ஒதுக்குங்கள் அல்லது சுருக்குங்கள்.தொலைக்காட்சி, செல்போன் முதலியவை சில உதாரணங்கள்.

40.
உங்கள் பணிகளைத் திட்டமிட்டுச் செய்யுங்கள். குடும்பத்துக்கான நேரத்தில் அலுவலகமும், அலுவலக நேரத்தில் குடும்பமும் தலையிட வேண்டாம்.
41. வாரக் கடைசியில், நீங்கள் உணர்ந்த சந்தோஷ தருணங்கள், மற்றவர்களுடன்சேர்ந்து சிரித்த நிமிடங்கள் ஆகியவற்றைப் பட்டியல் போடுங்கள். இது, உங்கள்வாழ்க்கை எந்தளவுக்கு ஆனந்தமாகக் கழிகிறது என்பதை அறிவதற்கான சுயபரிசோதனை. 

42.
நேரம் தவறாமை, மிக முக்கியம். காலை முதல் இரவு வரை அனைத்துவேலைகளையும் குறித்த நேரத்தில் முடிப்பது.. பதற்றம், பரபரப்பு முதலியவற்றைநம் வாழ்வில் ருந்து விரட்டும். வேலைக்குச் செல்லும் பெண்கள், அடுத்தநாளுக்கான உடையில் இருந்து டூ-வீலரில் பெட்ரோல் செக் செய்வது வரைஎல்லாவற்றையும் முதல் நாள் இரவே முடித்து விடுவது நலம். 

43.
-மெயில் பார்க்க, லெட்டர் எழுதவெல்லாம் காலை, இரவு எனஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நேரம் வசதியாக இருக்கும். உங்களுக்கான அந்த நேரத்தைக் கண்டுபிடித்து, அந்த வேலைகளை அந்த நேரத்துக்கு ஒதுக்குங்கள். 

44.
டைரி எழுதுங்கள். வாரம், மாதம், வருட இறுதிகளில் உங்கள் டைரியைப்புரட்டுங்கள். உங்களது இலக்குகளையும், அதற்கு நீங்கள் கொடுத்துள்ளஉழைப்பையும் அறியலாம்.

45.
நம்பிக்கை, குடும்ப வாழ்க்கையின் அஸ்திவாரம். மற்றவர்கள் உங்கள் துணை மீது சொல்லும் குற்றச்சாட்டுகளைப் போட்டுக் குழப்பிக் கொள்ளாமல், அவரிடமே நேரடியாக கேட்டு விடுங்கள். அதேபோல, உங்கள் துணையை யாரிடமும் விட்டுக் கொடுத்தும் பேசாதீர்கள்.

46.
உங்கள் துணைக்கு நீங்கள் என்ன வாக்குறுதி கொடுத்தாலும் அதைநிறைவேற்றுவதில் உறுதியாக இருங்கள். நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை கொடுக்காமல் இருப்பதே நல்லது.

47.
வாழ்க்கைத் துணையின் உணர்வுகளுக்கு மதிப்புக் கொடுங்கள். முடிவுகள்எடுக்கும்போது கலந்துரையாடுங்கள். ஒருவருக்கொருவர் முக்கியத்துவம்கொடுப்பது, ஆரோக்கியமான வாழ்க்கையின் அடையாளம்.

48.
மனம் விட்டுப் பேசுங்கள். அதற்காக தேவையில்லாத பழைய சோகக் கதைகளை கிண்டிக் கிளறாமல், ஆரோக்கியமான உறவுக்கு அழைத்துச் செல்லும் சந்தோஷமான விஷயங்களைப் பேசுங்கள்.

49.
உங்கள் விருப்பத்துக்குத் தக்கபடி வாழ்க்கைத் துணையை வளைக்கப்பார்ப்பதுதான் பல்வேறு சிக்கல்களுக்கும் காரணமாகிவிடுகிறது. எனவே,அவர்களை அவர்களாவே இருக்க விடுங்கள், அப்படியே நேசியுங்கள். ஐந்து விரலும் ஒன்றாக இருப்பதில்லைதானே?! 

50.
சின்னச் சின்ன அன்பில்தான் ஜீவன் இருக்கிறது. எனவே, அவரின் பிறந்தநாள்,திருமண நாள், குழந்தையின் பிறந்த நாள் போன்றவற்றை நினைவில் வைத்து வாழ்த்துங்கள். உங்கள் வாழ்க்கைத் துணையின் பெற்றோரின் ஸ்பெஷல்நாட்களையும் நினைவில் வைக்க முடிந்தால், அசத்திவிட்டீர்கள் என்று அர்த்தம்.
51. வீட்டு வேலை என்பது முழுக்க முழுக்க பெண்களின் டிபார்ட்மென்ட் எனசோம்பேறித்தனமாக ஒதுங்காமல், ஷெல்ஃப் சுத்தம் செய்வது, பெட் ஸ்ப்ரெட்மாற்றுவது என்று பலவற்றை கணவரும் பகிர்ந்து கொள்ளலாம்.

52.
செஸ், கேரம்போர்டு போன்ற இண்டோர் கேம்ஸ் சிலவற்றை அவ்வப்போதுகணவர், மாமியார், மகன், மகள் என குடும்பமாக அமர்ந்து விளையாடிப் பாருங்கள். இடைவெளிகள் குறையும்... ஆனந்தம் அதிகரிக்கும்.

53.
திருமணமாகி சில ஆண்டுகள் ஆகிவிட்டாலே ரொமான்ஸ் எல்லாம் காணாமல் போய்விடுகிறது. இது மிக மிகத் தவறு. அடிக்கடி வாழ்த்து அட்டைகள் வழங்குவது, வெளியே டின்னர் போவது, இருவருமாக தியேட்டருக்குப் போவது என அன்புக்கு பெட்ரோல் போட்டுக்கொண்டே இருங்கள். செய்வதை விரும்பிச் செய்யுங்கள்

. 54.
தாம்பத்ய உறவு என்பது ஆரோக்கியமான குடும்ப வாழ்க்கையின் சாவியைப் போன்றது. எந்தக் காரணம் கொண்டும் சாவியைத் தொலைக்காதீர்கள். 

55.
அவ்வப்போது பரிசுகள், பாராட்டுகள் வழங்குங்கள். சின்னச் சின்னஅங்கீகாரங்களிலும், பாராட்டுகளிலும் வாழ்க்கையின் சுவாரஸ்யம் பல மடங்குஅதிகரிக்கும். 

56.
ஒருவர் பேசிக்கொண்டே இருக்க, இன்னொருவர் கேட்டுக் கொண்டே இருப்பதுஆரோக்கியமான உரையாடல் அல்ல. எனவே, நிறைய பேசுங்கள்.. நிறைய கேளுங்கள். இரண்டும் முக்கியம்.

57.
உங்கள் துணைக்கு என்ன பிடிக்கும், என்ன பிடிக்காது என்பதை அறிந்துவைத்திருங்கள். நீங்கள் அவர் மீது கொண்டுள்ள அன்பையும் அக்கறையையும்அவருக்கு உணர்த்தும் வழிகள் இவை. 

58.
மன்னிப்புக் கேட்பது, கொடுப்பது.. இரண்டும் சகஜமாக இருக்கட்டும். 'எப்படி நான் போய் மன்னிப்புக் கேட்பது' எனும் வீண் ஈகோவை விட்டு ஒழியுங்கள். அதேபோல மன்னிப்புக் கேட்டால் விநாடிகூட தாமதிக்காமல் மன்னித்துவிடுங்கள். உடனே அந்தப் பிழையை மறந்தும் விடுங்கள்.

59.
கடந்து சென்ற கசப்பான நிகழ்ச்சிகளை, உரையாடல்களை 'குத்திக் காட்டி'ப் பேசாதீர்கள். இவை ஆரோக்கியமான உரையாடல்களுக்குக் கொள்ளி வைக்கும்.

60.
ஒருவர் கோபமாக இருந்தால் அடுத்த நபர் கொஞ்சம் தணிந்து போகவேண்டும். சண்டைக்குச் சண்டை போட்டால் குடும்ப வாழ்க்கை அதோகதிதான். உறவுகளுக்கு உயிர் கொடுங்கள்!